சமீப பதிவுகள்

ஆய்வுகள்

கண்ணோட்டம்

செய்தி பார்வை 03-06-2016

trump-coal

டிரம்பின் தன்னிச்சைவாதம் அவரை பாரிஸ் வானிலை சந்திப்பிலிருந்து விலக செய்தது

டிரம்ப் 195 நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் இருந்து விழுகுவதாக அறிவித்தார்.

டிரம்ப் விடுத்த அறிவிப்பில் இந்த மாநாட்டின் விதிகள் ஒரு தலை பட்சகமாக இருப்பதாக கூறி , இதனால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

நான் அமெரிக்கர்களின் பிரதிநதியாக உள்ளேன் , பாரிஸ்க்கு அல்ல என கூறியிருந்தார். இதனால் அவரின் கட்சியில் அவருக்கு பாராட்டும் , மற்ற அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் மற்றும் சுற்றுப்புற பாதுகாவலர்கள் போன்றோரிடம் கண்டனமும் பெற்றுள்ளார்.

இந்த அறிவிப்பு உடனடியாக செயல் படுத்த முடியாது ஏனெனில் , நவம்பர் 2020 வரை , இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா உடன்படவேண்டும். எனினும் , இது டிரம்ப் தன்னை தன்னிச்சைவாதியாக வெளிக்காட்டியுள்ளார்.

உள்ளபடி , அமெரிக்கா இப்போது பெரும்சக்தி உடைய நாடக விளங்குகிறது. உலக ஒழுங்கை தீர்மானிக்கும் நாடக உள்ளது. இன்று மனித குளம் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இதுவே காரணமாகும். இன்று உள்ள பிரச்சனைகள் தீர வேண்டுமெனில், இந்த நாட்டிற்கு பதிலாக மக்கள் மீது நேசம் கொள்ளும் நாடு தலையெடுத்தாகவேண்டும் .

அமெரிக்கா தன்னுடைய தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மற்ற தயங்குகிறது

டிரம்ப் தன்னுடைய பிரச்சாரத்தில் 1995 ஆம் ஆண்டின் அமெரிக்க சட்டத்தை மதிக்கும் வரையில் தன்னுடைய தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதாக கூறியிருந்த நிலையில் , இப்போது அதிலிருந்து பின்வாங்குகிறார்.

“டிரம்ப் சமீபத்தில் , தன்னுடைய தூதரகத்தை டெல் அவிவ் நகரில் அமைக்க கையெழுத்து இட்டுள்ளார். “

பல மாதங்களாக தன்னுடைய அதிகாரிகளிடம் நடந்த விவாதத்திற்கு பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார். 1995 ஆண்டு சட்டத்தின் படி மாற்றியிருந்தால் பலஸ்தீன் இஸ்ரேல் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இருக்காது என்பதை உணர்ந்துள்ளார்.

இந்த முடிவால் இஸ்ரேல் மக்கள் அதிருப்தியாக இருப்பார்கள் என்பதை அறிந்த அமெரிக்கா , இந்த முடிவு தற்காலிகமானது தான் என அறிவித்துள்ளனர்.

உண்மையில் அமெரிக்கா இந்த தூதரகத்தை மாற்றுவதை எவராலும் தடுக்க முடியாதென்ற போதிலும், முஸ்லிம்களின் வெறுப்பையும் கோபத்தையும் அஞ்சியே இந்த முடிவை எடுத்துள்ளது.இவர்களால் இந்த யூத நகரத்தை அளிக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளது. அமெரிக்கா முஸ்லீம் ஆண்களும் பெண்களும் இந்த கொடிய அரசுக்கு எதிராக உயிரையும் கொடுக்கின்றனர்.

சில நாட்களுக்கும் முன் 16 வயது பெண் இஸ்ரேல் வீரர்களை லேசாக தாக்கியதால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை இஸ்ரேல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த அடுத்த நாள் மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்திருந்தனர்.

உண்மையில் , இந்த முஸ்லீம் உம்மத் மிகவும் சக்திபெற்றவர்கள் , அனால் இதனை அறியாமல் இங்குள்ள ஆட்சியாளர்கள் மேற்கத்திய தலைவர்களுக்கு கட்டுப்படுவதை தவிர வேறு வழியில்லை என கூறுகின்றனர் , உண்மையில் மேற்கத்தியர்கள் முஸ்லிம்களை கண்டு அஞ்சுகிறன்றனர்

சீன முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் அல்ல

இன்று முஸ்லிம்கள் பலகீனத்தை உணர்வதினால் , சீனாவை மேற்கத்தியர்களுக்கு மாற்று சக்தியாக பார்க்கின்றனர். அனால் உண்மையில் அவர்கள் தங்கள் நாட்டில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறையை சிந்திக்க வேண்டும். அங்குள்ள குழந்தைகளுக்கு முஸ்லீம் பெயர்களை சூடுவதிலும் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

“முஸ்லீம் குழந்தைகளின் பெயர்களை மற்ற அரசு வற்புறுத்துகிறது, மேலும் பெரியவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் ஊர்வலத்தில் பங்கேற்க நிர்பந்திக்க படுகிறார்கள்.

ரம்ஜான் மாதத்தில் சீன அதிகாரிகள் இஸ்லாம் , குரான் , ஜிகாத், சதாம், மெக்கா ,மதீனா ,அரபாத் போன்ற 16 பெயர்களை , குழந்தைகள் மீது சூட்ட தடைவிதித்துள்ளது.”

அதே அறிவிப்பில், 2012 ஆகஸ்ட் மாதத்திற்கு அச்சிடப்பட்ட குர் ஆன்களை அரசு கைப்பற்றுகிறது. மேலும் கடந்த வருடம் வந்த சட்டத்தின் படி , முஸ்லிம்கள் மத பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்கள் சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உண்மையில் நம்முடைய பாதுகாவலர்கள் மேற்கத்தியவாதிகளோ அல்லது சீனர்களோ அல்ல, அல்லாஹ் (சுபு) மீது தவக்கல் வைத்து , இறையச்சமுடன் ஆட்சி செய்யும் இஸ்லாமிய கிலாபத்தை வழி நடத்தும் கலீபா ஆகும்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கர்களில் அதிகமானோர் இஸ்லாமிய தீவிரவாதத்தை அஞ்சுகின்றனர்

இந்த வருடம் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை 12 நாடுகளில் எடுத்த கருத்துக்கணிப்பில் அதிகமானோர் , இஸ்லாமிய தீவிரவாதத்தை அஞ்சுகின்றனர் என தெரிவித்துள்ளனர் , இதில் பிரிட்டன் நாட்டில் மட்டும் 79 சதவீதம் கூறியுள்ளனர். இதே சதவீதம் தான் மற்ற 10 ஐரோப்பிய நாடுகளிலும் தெரிகிறது. ஈராக் மற்றும் சிரியா நகரில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு சமீபத்தில் நடந்த பாரிஸ், பெர்லின் , ப்ரஸ்ஸஸ் மற்றும் மான்செஸ்டர் நகர தாக்குதலுக்கு பிறகு ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களின் மீதான அச்சம் அதிகரித்துள்ளது. முஸ்லிம்கள் பெயர்களை கொண்டு நடைபெறும் தீவிரவாதத்தை பல நாடுகள் அஞ்சுகின்றனர். குறிப்பாக முதியவர்கள் மத்தியில் இந்த அச்சம் அதிகமாக காணப்படுகிறது.[மூலம்: பியூ ஆராய்ச்சி மையம் ]

மேற்கத்திய அரசுகள் , தங்கள் மக்களின் மீது தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான அச்சத்தை திணித்து ,முஸ்லீம் நாடுகளில் நுழைவதை நியாய படுத்துகிறார்கள். மக்களின் ஆதரவின்றி அவர்களால் இந்த முஸ்லிம்கள் மீதான போரை தொடர முடியாது .

கிருஸ்துவ மதகுரு ஐரோப்பா 30 ஆண்டிலும் ரஷ்யா 50 ஆண்டிலும் முஸ்லீம் நகரமாக மாறும் என தெரிவித்துள்ளார்

ரஷ்யாவிலுள்ள கிருஸ்துவ மதகுரு இஸ்லாமிய மாற்றத்திற்கு மேற்குலகம் தயாராக வேண்டும் என கூறியிருந்தார். டிமிட்ரி ஸ்மைர்னோவ் தன்னுடைய சொற்பொழிவில் வெகு விரைவில் ஒட்டுமொத்த கிருஸ்துவ சமயமும் அழிந்துவிடும் என எச்சரித்துள்ளார். ஐரோப்பாவில் 30 ஆண்டுகள் , ரஷ்யாவில் 50 ஆண்டுகள் அதிகபட்சம் என்கிறார். ஏனெனில் முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் மார்கத்திற்க்காக உயிரை விட தயாராக உள்ளனர். முல்லாக்கள் உத்தரவிட்டால் முஸ்லீம் இளைஞர்கள் தங்களுடைய உடம்பில் வெடிபொருட்கள் வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் அவர்கள் தீவிரவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள். அவருடைய நோக்கம் உலகை அச்சுறுத்த அல்ல. அவர்கள் இந்த ஓரினசேர்க்கைவாதிகள் நடத்தும் ஆட்சியில் பங்கேற்க விரும்பவில்லை. அனால் கிருஸ்துவ உலகில் எந்த ஒரு மதிப்பும் இல்லை, மேற்குலகத்தில் கற்பழிப்புகளும் , கொலைகளும் அதிகரித்துள்ளது. ஆண்களால் தங்கள் பெண்களை பாதுகாக்க முடியவில்லை ( ஆனால் கற்பழித்தவன் ஒரு ஆண்டு சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்) . மேற்குலகில் உள்ள கிருஸ்துவர்கள் நோயாளிகள் போன்று உள்ளனர் , அவர்கள் இறந்தவர்களுக்கு சமமானவர்கள்.[மூலம் : சி.பி.என் ]

உண்மையில் இவருடைய கருத்து சரியே.. இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த மேற்கத்தியவாதிகள் தங்களுடைய கேடுகெட்ட கொள்கையை பாதுகாக்க முடியும்

அமெரிக்காவின் ஆப்கான் போர் : 16 ஆண்டுகள் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் , போர் இன்னும் தொடர்கிறது ஆப்கான் போர் 16 ஆண்டுகளை எட்டியுள்ளது.

இதனை ஆண்டுகளில் 3000 வீரர்கள் அமெரிக்கா தரப்பில் இறந்துள்ளனர், கணக்கற்ற ஆப்கான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிகார அறிவிப்பின் படி 1,50,000 மக்கள் இதுவரை இருந்துள்ளார்கள் என்பது கேலியாக தெரிகிறது. கிட்ட தட்ட 10 லட்சம் மக்கள் இது வரை கொல்லப்பட்டிருக்கின்றனர் என்று ஆப்கான் தகவல்கள் தெரிவிக்கின்றது.கடந்த ஆண்டு ஐந்து லட்சம் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இது கடந்த 2008 முதல் உள்ள எண்ணிக்கையில் மிக அதிகமாகும். ஏப்ரல் 21 அன்று தலிபான் வீரர்கள் ஆப்கான் ராணுவத்தில் புகுந்து 140 வீரர்களை கொன்றுள்ளனர். இது அமெரிக்கா மிக பெரிய வெடிகுண்டை வீசிய மறுவாரம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 94 ஐ.எஸ். வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதன் மூலம் தலிபான் வீரர்கள் அமெரிக்கா வீசிய வெடிகுண்டை ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை என்பது தெளிவாகிறது. தலிபான் தற்போது 40 சதவீதம் நிலப்பரப்பை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.ஹெல்மாண்ட் ,காந்தகார் ,சாபுல், உருஸ்க்கான் போன்ற பகுதியில் உறுதியான கட்டுப்பாட்டை கொண்டுள்ளது. கூடியவிரைவில் தென் பகுதியிலுள்ள பாக்கிஸ்தான் எல்லையை கட்டுப்படுத்தும். தலிபான் தலைவர்களை கொல்வதினால் , தலிபான் ஒருபோதும் பின் வாங்கவில்லை. அமெரிக்க புலனாய்வு இயக்குனர் அமெரிக்கா செனட்டில் கூறிய செய்தியில் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் 2018 ஆண்டு மிக மோசமாகும் என்கிறார். இதன் மூலம் அமெரிக்கா தேவைகளை காணி அரசு(Ghani Government)  பூர்த்திசெய்யமுடியாது என தெளிவாக்கியுள்ளார் [மூலம் : அல்டெர்னட் ]

உண்மையில் தெளிவாக ஆப்கான் நிலவரத்தை ஆராய்ச்சி செய்யும் எவரும், அமெரிக்கா ஆப்கான் அரசை பலவீனமாகவே இருக்க வைத்து தாலிபானை அழிக்க முயற்சி மேற்கொள்ளவில்லை என்பதை அறிவார்கள். அமெரிக்கா இரு அமைப்பினரை ஒன்றோடு ஒன்று மோத செய்து , அதன் மூலம் தங்கள் காரியத்தை தக்கவைத்துள்ளது. இதே உத்தியை தான் அமெரிக்கா மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் மேற்கொண்டது

Comments are closed.