சமீப பதிவுகள்

ஆப்கானிஸ்தானின் சாமானிய மக்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நேர்மையான மக்கள் அமெரிக்காவின் குற்றங்களுக்கு எதிராக அமைதியாக இருக்கமாட்டார்கள்

ஆப்கானிஸ்தான் குஉன்துஸ் மாகாணத்தில் உள்ள சார்தரா மாவட்டத்தில் நவம்பர் 4 2017 அன்று அமெரிக்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் 30 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் (பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்) உட்பட கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்கள் தீவிரவாதிகள் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக அறிந்த பின்னரும் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் நவம்பர் 7 2017 அன்று விடுத்த அறிவிக்கையில் இறந்தவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே அதில் பொது மக்கள் ஒருவர்கூட கிடையாது என்று அறிவித்துள்ளது.இதற்கிடையில் ஆப்கான் அதிகாரிகள் இந்த சம்பவத்திற்கு எந்தவொரு எதிர்வினையும் காட்டவில்லை மாற்றாக டெக்சாஸில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஹிஸ்ப் த் தஹ்ரீர் ஆப்கானிஸ்தான் ஊடக அலுவலகம் – அமெரிக்கா படையின் தாக்குதலையும் ஆப்கான் அதிகாரிகளின் நிலைப்பாட்டையும் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் ஜோன் கெர்ரியால் நியமிக்கப்பட்ட அரசாங்கத்தின் துரோகத்தனமான தன்மை பற்றிய மற்றொரு நினைவூட்டலாகும். இந்த அரசாங்கம் அதன் துவக்க விழா முடிந்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகள் அதன் மக்களுக்கு மிகவும் அன்னியமாக உள்ளது அமெரிக்காவில் நடைபெறும் அனைத்து சிறிய பெரிய சம்பவங்களுக்கும் விரைந்து பதில் பதிவிடுகின்றனர். தம் எஜமானர்களான US மற்றும் NATO படையினரால் பாதிக்கப்படும் தனது மக்களின் துன்பங்களுக்கு கடுகளவும் அக்கறை செலுத்துவதில்லை. அதனிலும் கீழிறங்கி அவர்களின் குற்ற செயல்களுக்கு தாங்களே (ஆப்கான் ராணுவம்) பொறுப்பேற்கின்றனர்.

எனவே ஆப்கானிஸ்தானில் உள்ள நேர்மையான செல்வாக்குமிக்க தனிநபர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இத்தகைய சம்பவங்கள் குறித்து மௌனமாக இருக்க வேண்டாம் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.அரசாங்கம் மற்றும் வெளியுறவுத் தூதரகங்கள் உருவாக்கிய அந்த அகநிலை வேறுபாடுகளை ஒதுக்கி விடுங்கள். சீனா மற்றும் ரஷ்யாவிலிருந்து எந்தவொரு ஆதரவையும் பெறாமல் அமெரிக்க மற்றும் நேட்டோவுடன் இடப்பட்ட இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையை எதிர்த்து நில்லுங்கள். ஒரு படையினரை தோற்கடிப்பதற்கு மற்றோரு படையினரிடம் உதவி கேட்பதன் மூலம் தற்போதுள்ள அரசியல் மற்றும் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் மாற்றம் ஏற்படாது. கூடுதலாக சீனா போன்ற நாடுகள் இஸ்லாத்துடன் போர் நிலையிலுள்ளது. இவற்றுடன் நட்புபாராட்டுவது இஸ்லாமிய ஷரீஅத்திற்கு முரணானது. இந்த அரசாங்கத்திடமிருந்து நமது அறிவார்ந்த அரசியல் நிலைப்பாடு தனித்து நிற்பது போன்று கிழக்கு மற்றும் மேற்கத்திய சிந்தனையிலிருந்தும் அவர்களின் அரசியல் கோட்பாட்டிலிருந்தும் நாம் விலகி நிற்கவேண்டும். அல்லாஹ்வின் கயிற்றை இறுக்க பற்றிக்கொண்டு. குர்ஆன் மற்றும் சுன்னாஹ் அடிப்படையில் ஒன்றிணைந்து தற்போதுள்ள நிலையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

செய்திப்பார்வை 10.11.17

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர்

ஊழலுக்கு எதிரான சவூதியின் நடவடிக்கையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் அறிக்கை.

இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களுக்கே அதிகம் தொல்லை கொடுக்க கூடியவர்களாக இருக்கின்றனர்

புதியதோர் அறிக்கையின்படி வீதிகளில் செல்லும் பொழுது இனவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்க படுகின்ற முஸ்லிம்களில் அதிகமானவர்கள் பெண்கள்தான் என தெரியவந்துள்ளது. ‘பிரிட்டனில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்தாக்குதல்கள் நான்கு சதவீதம் அதிகரித்துள்ளது’ என முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடப்பதை கணக்கீடு செய்யும் அமைப்பான ‘Tell MAMA (Measuring Anti-Muslim Attacks)’ தன்னுடைய வருடாந்திர அறிக்கையில் கூறியுள்ளது. முஸ்லிம் பெண்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப்/நிகாப் அணிந்திருப்பவர்களே இதில் அதிகம் பாதிக்கப் படுகின்றனர் என Tell MAMA கூறியுள்ளது.

அந்த அமைப்பு கூறியிருப்பவதாவது: “சமூகத்தில் சொந்த வாழ்கை உரிமையில் சுதந்திரம் கொடுக்கப்பட்ட முஸ்லிம் பெண்களின் மீதான இந்த வெறுப்புணர்வு அவர்களின் குடும்பங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஒருங்கிணைப்பிலும் கூட்டமைப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.”

இந்த ஆராய்ச்சியின்படி முஸ்லிம்களில் வன் கொடுமை சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களில் 56% பெண்கள் என தெரிய வந்துள்ளது. இரண்டு வருடாமாக தொடர்ந்து வரக்கூடிய இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் மீதான வன்கொடுமையில் ஆண்களை விட பெண்களே குறிவைக்கபடுகின்றனர் என உறுதியாகியுள்ளது. அதிலும் அறியப்பட்ட தாக்குதலில் 69% சதவீதம் தாக்குதல் நடத்துபவர்கள் வெள்ளை இனத்தவர்களே என அறிக்கை கூறியுள்ளது.

இஸ்லாமிய எதிர்ப்பால் (Islamophobia) பாதிக்கப்பட்ட பெண்களின் படி தாக்குதல் நடத்துபவர்களின் பெரும்பான்மையானவர்கள் தரக்குறைவான வார்த்தைகளையே பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளனர். அவர்கள் தாக்கப்படுவது தன்னுடைய பாலினத்தினாலும் தான் பின்பற்றும் மதத்தினாலுமேயாகும் (என கூறியுள்ளனர்). பிரிட்டன் தெருவில் நடக்கும் ‘இதுபோன்ற சம்பவங்கள்’ கடந்த 2015 ல் 437 சம்பவங்களிலிருந்து 2016 ல் 642 வரை உயர்ந்த்துள்ளது. [Source: Metro]

பிரட்டனில் வாழும் ஆண் சமூகத்தின் இதுபோன்ற தவறான எண்ணங்களும் தாக்குதல்களும் தனித்துவமானதல்ல. மாறாக மற்ற மேற்கு நாடுகளிலும் இது போன்ற தாக்குதல்கள் முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக ஆண்களால் நடத்தப்படுகின்றன. மேற்கத்தியர்கள் உள்ளூரிலும் சரி அல்லது வெளி முஸ்லிம் நாடுகளில் போர்தொடுக்கும் போதும் சரி அவர்கள் ‘சுதந்திரம்’,‘சகிப்புத்தன்மை’ என வெறும் வாய் வார்த்தைகைளையே கூறுன்றனர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

ஊழலுக்கு எதிரான சவூதியின் நடவடிக்கையில் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக டிரம்ப் அறிக்கை.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த திங்கள் கிழமை சவூதியில் நடந்த ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை பற்றி தன்னுடைய டிவிட்டர் தளத்தில் கூறியதாவது “அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றனர்.”

டோக்யோவிலிருந்து இரு பகுதியாக அனுப்பிய டிவிட்டர் பதிப்பில் தனக்கு சவூதி மன்னர் சல்மானின் மீதும் இளவரசரின் மீதும் அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் வெகு காலமாக சவூதியை நாசமடைய செய்துள்ளார்கள் என்றும் டிரம்ப் எழுதியுள்ளார். கைது செய்யப்பட சவூதி அரச குடும்பத்தவர்களையும் வணிக தலைவர்களையும் இங்கு அதிபர் டிரம்ப் குறிப்பிடுகிறார். இவ்வாறான நடவடிக்கைகள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் என சவூதி அரசாங்கம் கூறியுள்ளது.

எண்ணை பொருளாதாரத்திலிருந்து சவூதி ராஜ்யத்தை மீட்க இளவரசர் முஹமது இப்னு சல்மான் ராஜ்யத்தின் கட்டமைப்பை சீர்செய்யும் எதிர்பாராத செயலாகவே இது கருதப்படுகின்றன. முன்பிருந்தே அமெரிக்காவிற்கும் சவூதிக்கும் மத்தியில் மிக நெருக்கமான உறவுகள் இருந்து வந்துள்ளன அதிலும் குறிப்பாக டிரம்ப் கடந்த மே மாதம் பதவிக்கு வந்த பிறகு அவரின் முதல் வெளிநாட்டு சுற்று பயணமாக சவூதி சென்றது இதை உறுதி படுத்த கூடியதாக இருக்கின்றது.

அதில் அமெரிக்காவும் சவூதியும் சுமார் 380 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதில் 110 பில்லியன் டாலர் ஈரான் மற்றும் இதர போராளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிரான ஆயுத ஒப்பந்தங்களை உள்ளடக்கியதாகும்.

டிரம்ப் அவருடைய அலுவலகம் அறிவித்த தகவலின் படி மன்னர் சல்மானுடன் கடந்த சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளார். இதில் ‘மிதவாத’ ‘அமைதியான’ ’சகிப்புதன்மையுடைய’ அரசை உருவாக்க சவூதி அரசும் அதன் இளவரசரும் முயற்சி செய்வதை அவர் வரவேற்றுள்ளார். மேலும் (சவூதி அரசின் ராட்சத எண்ணை நிறுவனமான அரம்கோ (Aramco) வின் பங்குசந்தையில் நுழையும் முதல் நடவடிக்கையான IPO வை அறிமுகம் செய்வதை பற்றி அவர் கூறுகையில்) அரம்கோவின் IPO அறிமுக தளமாக அமெரிக்காவின் பங்கு சந்தையான Wall Street இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டார்.[Source: ArabNews]

மன்னர் சல்மானை பற்றியும் இளவரசரைப்பற்றியும் அதிபர் டிரம்ப் புகழ்ந்துள்ளது அவருக்கு ஏற்கனவே சவூதியின் கைது நடவடிக்கை தெரிந்துள்ளது என்பதையே உறுதி படுத்துகின்றன. இதற்கு முன்னர் கத்தாருக்கு எதிராக சவூதி எடுத்த நடவடிக்கையிலும் டிரம்பின் பங்கை காண முடியும். ‘vision 2030‘ என்ற திட்டத்தை நிறைவேற்ற சவூதி அரசு எடுக்கும் எல்லா மாற்றங்களிலும் டிரம்ப் அரசின் பின்னணியை தெளிவாக காண முடியும். சவூதி சமூகத்தை மதசார்பற்ற சமூகாக மாற்றுதல் பொருளாதார வளங்களை சுரண்டுதல் அதிகப்படியான அதிகாரத்தை இளவரசர் முஹமது இப்னு சல்மானிடம் ஒப்படைப்பது போன்றவைகள் இதிலடங்கும்.

செய்திப்பார்வை 01.11.17

தலைப்புச் செய்திகள்:

1. ஸ்பெயின் நாட்டிற்க்கான தேசிய சவால்கள்.
2. சிரியா நாட்டிற்க்கான சதி தொடர்கிறது.
3. உலுக்கி போன ஹாலிவுட் தொழில்துறை.

1. ஸ்பெயின் நாட்டிற்க்கான தேசிய சவால்கள்

கடந்த அக்டோபர் மாதம் நடைப்பெற்ற கேட்டலோனியா சுதந்திர அறிவிப்பை ஸ்பெயினின் “அரசியலமைப்பு நீதிமன்றம்” கவிழ்த்தது என்ற தகவல் நீதிமன்ற செய்தி தொடர்பாளரிடம் கிடைத்தது. இந்த செய்தி பதவியிறக்கப்பட்ட கேட்டலன் ஜனாதிபதி கார்லஸ் பூஜ்டிமோன் (Carles Puigdemont) பிரஸ்ஸல்சில் (Brussels) மக்களிடம் உரையாற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் வந்தது. மேட்ரிட்(Madrid) அரசு இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளின் காரணமாக பெல்ஜியம் தப்பிச் சென்றார், அதற்குப் பின் இது தான் இவரின் முதல் உரையாகும். சுதந்திரத்தைக் கோரி அரசுக்கு அழுத்தத்தை தந்த பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக ஸ்பெயினிய பொது வழக்கறிஞர் முன்னதாக ஒரு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அக்டோபர் 1-ஆம் தேதியில் நடைபெற்ற கேட்டலோனியா வாக்கெடுப்பில் ஸ்பெயினிடமிருந்து பிரிந்து செல்ல மக்கள் பெருமளவில் (90% கும் மேலாக) வாக்களித்ததை அப்பகுதி கண்டது. வாக்களிக்க தகுதி உள்ளவர்களில் கிட்டதட்ட 50% மக்கள் மேட்ரிடை குற்றம்சாட்டி வாக்குப்பதிவு நிலையங்களை தடுத்ததுக்கும், வாக்குகளை பறிமுதல் செய்ததுக்கும் அரசுக்கு எதிராக போரட்டங்களில் ஈடுபட்டனர். வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என்று மேட்ரிட் அறிவித்து, தேசிய மற்றும் சிவில் காவலாளரிடமிருந்து ஆயிரத்திற்கும் அதிகமான அதிகாரிகளை வாக்கெடுப்பின் நாளுக்கு முன்னதாக நிறுவினர். மக்கள் மற்றும் காவலாளர்களுக்கிடையில் நடந்த மோதல்களுக்கு பின் பார்சிலோனா (Barcelona) மற்றும் வேறு இடங்களில் 900 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்களில் சிலர் அபாயமான நிலையில் உள்ளன என்றும் கேட்டலான் சுகாதார சேவை (Catalan health service) கூறியது.

பல்வேறு விதமான மக்களுக்காக ஒரு ஐக்கியப்பட்ட நிலையான மாநிலத்தை உருவாக்க ஸ்பெயின் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறது, இந்த தனி நாடு பிரிவினை பிரச்சனை தேசியவாத தோல்விகளில் சமீப தோல்வியாகும்.

2. சிரியா நாட்டிற்க்கான சதி தொடர்கிறது

கசகஸ்தானில் நடைபெற்ற அஸ்தானா மாநாட்டில் ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் “ரஷ்யாவின் முன்முயற்சி” என்ற பெயரில் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. சிரியாவில் சமாதான முயற்சிகளை கொண்டு வரும் விதத்தில் ஒரு அரசியல் தீர்வை காண அதன் ஆட்சியாளர்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒன்றாக அழைத்து “மகாசபையில்” பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவுவது தான் இந்த அறிக்கையின் நோக்கம் என அறிவித்துள்ளன. இருப்பினும், அஸ்தானாவில் இருந்த எதிர்ப்பு பிரதிநிதிகள் இத்திட்டத்தின் உண்மையான நோக்கம் மற்றொன்ரை மேற்கொள்ள எடுக்கப்படுகின்றது என்று எண்ணி உடனடியாக சந்தேகத்தை தெரிவித்தனர். ஜனவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளும் ஐ.நா., சபையின் ஆதரவோடு ஒரே மாதிரி இருந்தன.

இதுவரை நடந்த அனைத்து பேச்சுவார்த்தைகளில் மூடிமறைத்து வெளிப்படுத்தப்படாத உண்மையான விஷயம் “மோதல் அல்லாத மண்டலங்களாகும்” (de-escalation zones). பஷருல் அசாத்தை பதவியில் வைக்கும் திட்டத்திற்கு மறுப்பவர்களை ரஷ்யா மற்றும் ஈரான் தொடர்ந்து கொல்லுவது தான் இந்த மண்டலங்களின் உண்மாயான நோக்கமாகும்.

3. உலுக்கி போன ஹாலிவுட் தொழில்துறை

தொடர்ந்து வெளிவரும் சர்ச்சைகள் ஹாலிவுட்டையும் பொழுதுப்போக்கு துரையையும் (Entertainment Industry) உலுக்கியுள்ளது. அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஸ்டூடியோ நிர்வாகியான ஹார்வி வெய்ன்ஸ்டைன் (Harvey Weinstein), அகாடமி விருது வென்றவர் (academy award winner) இவர் சமீபத்தில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் தாக்குதல், கற்பழிப்புப் போன்ற பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். இந்த தயாரிப்பாளர் தனது அந்தஸ்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை தன் இச்சைக்கு பயன்படுத்தியதும் அதில் சில பிரபலங்களும் இருந்ததும், பல்லாண்டுகளாக இந்த துன்புறுத்தல்கள் நடந்து கொண்டிருப்பதும் என்ற செய்திகள் பல மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதை விட அதிக அதிர்ச்சி தந்த விஷயம், பல ஹாலிவுட் நிர்வாகிகள் இவரின் செயல்களை பற்றி நன்கு அறிந்தும் அதை சாதாரண நடைமுறையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஹாலிவுட் என்பது தன் நிர்வாகிகளுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை உருவாக்குவதற்காக பெண்களை சுரண்டி பயன்படுத்தக்கூடிய ஒரு தொழில்துறை ஆகும். எனவே அத்தகைய நிர்வாகி தனது பதவியை தவறாக பயன்படுத்துவதைப் பார்த்து ஆச்சரியப்படக்கூடாது.

நியூ யார்க்கர் (New Yorker) இதழ் இச்செய்தியை ஒரு கதையாக அச்சிட முடிவு செய்தும், துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நடிகைகள் பிரபலம் அடைந்தும் இச்செயலை வெளியுலகதிற்க்கு தெரிவிக்கவில்லை என்பதை பார்க்கும்போது, இதுப்போன்ற கேவலமான செயல்கள் நடைமுறையில் எவ்வளவு சாதாரணமாக இருப்பது ஆச்சரியமானதாகும்.